மரவள்ளி கிழங்கில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்



மரவள்ளிக்கிழங்கு, நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும்.

மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கல்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது.

பச்சை மரவள்ளிக்கிழங்கில்... ஆற்றல் 157 கிலோ கலோரிகள் புரதச்சத்து 0.7 கிராம் கொழுப்புச்சத்து 0.2 கிராம் மாவுச்சத்து 28.2 கிராம் நார்ச்சத்து 0.6 கிராம் கால்சியம் 50 மி.கி. பாஸ்பரஸ் 40 மி.கி.

பல்வேறு பொருட்களின் தயாரிப்புகளுக்கு மூலப் பொருளாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்க, உணவில் சேர்க்க பல வடிவங்களில், மரவள்ளிக்கிழங்கு பயனாகின்றன.

கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் மரவள்ளிக்கிழங்கும் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்றால், அது மிகையில்லை.

இக்கிழங்கில் மிகைப்பட கிடைக்கும் ஒரு வைட்டமினான பி17 புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றது என கூறப்படுகிறது.

அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.

கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது. எலும்புகளின் வலிமை குறைந்து., கை கால் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படும்போது,பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும். ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும், உடலில் நீரின் அளவை, சரியாக்கும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில்

கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது. மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து, பால், பனை வெல்லம் கலந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட,

உடலுக்கு வளமாகும். மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது.

மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும். ஜவ்வரிசி இந்தியாவில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தே, உற்பத்தி செய்யப்படுகிறது,

ஜவ்வரிசி வாங்கும்போது, இவற்றை கவனித்து வாங்கவேண்டும். ஜவ்வரிசி கஞ்சி, சிறந்த காலை சிற்றுண்டியாகும், மேலும் விருந்துகளில் உணவில் சேர்க்கப்படும் ஜவ்வரிசி பாயசம், சுவையும் சத்தும் மிகுந்த செரிமான உணவாகும். ஜவ்வரிசியில் இருந்து வடகம், வற்றல் போன்ற எண்ணையில் பொறிக்கப்படும் உணவுவகைகள் மற்றும் ஜவ்வரிசி லட்டு போன்ற இனிப்பு வகை பதார்த்தங்களும் செய்யப்படுகின்றன. மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும், திரவ நிலை குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை மருத்துவத் துறைகளிலும், உணவுவகை தயாரிப்பிலும் பயனாகின்றன. மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனும் மாவுப்பொருள் பருத்தி ஆடைகளின் மொடமொடப்பு தன்மைக்கும், காதிதம் மற்றும் காகித அட்டைப் பெட்டிகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.



© Copyright vnandhininutrilite.in | Design by V V Technology