Articles

Explore nutrition articles, diet plans, healthy recipes and wellness tips curated by VNandhini Nutrilite.




cabbage Benefits
முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் A சத்து கண் பார்வைக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்.

முட்டைகோஸை நீரில் ஊறவைத்து அந்த நீரால் முகம் கழுவினால் சருமம் பளபளப்பாகும்.

உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
Copper Water Benefits
தாமிர (செம்பு) பாத்திர நீரின் நன்மைகள்
ஆயுர்வேதத்தின் படி மனித உடலில் கபம், பித்தம், வாதம் என்ற மூன்று தோஷங்கள் சமநிலையுடன் இருக்க வேண்டும்.

இந்த சமநிலையை பராமரிக்க தாமிர பாத்திரத்தில் வைக்கப்படும் குடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் உடலின் நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலின் உள் உறுப்புகள் சீராக செயல்பட உதவுகிறது.

தினமும் காலையில் இந்த நீரை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு அளிக்கிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

உணவுக் கட்டுப்பாடு & ஆரோக்கிய உணவுகள்

🍚 பச்சரிசி அதிகமானால் – சோகை நோய்
🍬 அச்சுவெல்லம் அதிகமானால் – அஜீரணம்
🍘 பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி
🫚 இஞ்சி அதிகமானால் – மென் குரல் இறுக்கம்
🍚 பழைய சோறு / கஞ்சி – வாயு, வயிற்று பொறுமல்
🥥 தேங்காய் – சளி, பித்தம், வறட்டு இருமல்
🥭 மாங்காய் – வயிறு கட்டும், இடுப்புவலி
🌾 கோதுமை – வயிறு வீக்கம், பித்தம்
🥜 பாதாம் – பித்தம் அதிகரிப்பு
🌿 முற்றிய முருங்கை – வாயு, சளி
🥛 எருமைப்பால் – கிட்னி கல்
🌶️ மிளகு – வெப்பம் உண்டாகும்
🌶️ மிளகாய் – சளி, விந்து பாதிப்பு
☕ காபி – கை நடுக்கம், பித்தம்
🍵 டீ – உடல் நடுக்கம், பசியின்மை
🍋 எலுமிச்சை – பாண்டு நோய்
🧂 உப்பு – எலும்பு உருக்கம்
🧅 வெங்காயம் – தலைவலி, சளி
🌸 குங்குமப்பூ – கரு பாதிப்பு
🧄 வெள்ளை பூண்டு – குடல் எரிச்சல்
🫘 எள்ளு – பித்தம் செரியாமை
🌾 அதிக உணவு – அமிர்தமும் நஞ்சு

© 2026 vnandhininutrilite.in • All Rights Reserved

💬 WhatsApp